கம்பஹா மாவட்டம் பமுனுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திஙிகட்கிழமை (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
பமுனுகம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 1,800 லீற்றர் (2,400போத்தல்கள் ) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.