பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 97 பேர் காத்தான்குடியில் கைது

17 0

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 97 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்னாநாயக்காவின்  பணிப்புரையின் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 10 நபர்களும் கசிப்பு விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட 60 நபர்களும் வேகமாக  வாகனம் ஓட்டியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 27 நபர்களும் உட்பட  97 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.