வாழைச்சேனையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது

18 0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிறந்துறைச்சேனை மற்றும் ஓட்டுமாவடி ஆகிய பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று திங்கட்கிழமை (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, பிறந்துறைச்சேனையில் 12 கிராம் 500 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் ஒருவரும் ஓட்டுமாவடியில் 2 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் இருவரும்  போதை மாத்திரையுடன் ஒருவரும் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.