ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டியேற்படும்

19 0

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலை அதிகரிப்பை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.

அடுத்த புத்தாண்டின் போது ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டிய நிலைமை நாட்டுக்கு மக்களுக்கு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (06)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.