புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் விபத்து ; இளைஞன் பலி ; ஒருவர் படுகாயம்

21 0

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் சிறாம்பியடி பகுதியில் இன்று திங்கட்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.