மீண்டும் சரிவை நோக்கி பங்குச் சந்தை

16 0

கொழும்பு பங்கு சந்தையின் விலைச்சுட்டெண்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சரிவை சந்தித்துள்ளன.

அதனடிப்படையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 170.82 புள்ளிகளாக ஆக சரிவடைந்தது.

இதற்கமைய கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,878.60 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

கடந்த இந்த விலைச்சுட்டெண் கடந்த வாரம் 16,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து இருந்தது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.57 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.