பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் வெளியான ஊடகச் செய்தி பற்றியது என்ற தலைப்பில், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
“பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் 2024.12.29ஆம் திகதி ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் கீழ்வரும் விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றோம்.
பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபாவும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628. ரூபாய் 55 சதமும் செலவு செய்யப்பட்டிருப்பதாக குறித்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2020.08.20ஆம் திகதியும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2024.11.21ஆம் திகதியும் இடம்பெற்றன.
இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரங்களுக்கான செலவுகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் வேறுபடுகின்றன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றோம்.