2 கோடி மக்கள் பட்டினி சாவை எதிர்கொண்டுள்ளனர் – எச்சரிக்கின்றது உலக உணவு அமைப்பு

303 0

துரித நடவடிக்கையினை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் ஆபிரிக்க கண்டத்தில் சுமார் 2 கோடி மக்கள் எதிர்வரும் 6 மாத கால பகுதியினுள் பட்டிச்சாவை எதிர்நோக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வட கிழக்கு நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், யேமன் ஆகிய நாடுகள் இவ்வாறான அபாய நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் விசேட கூட்டம் ரோம் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

அதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைப்பின் பிரதானி, பட்டினி சாவை ஒழிப்பதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.