வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சர்வதேச மத்தியஸ்தம் அவசியம் – பாப்பரசர் பிரான்சிஸ்

258 0

அணு சோதனை தொடர்பாக வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தீர்ப்பதற்கு சர்வதேச மத்தியஸ்தம் அவசியம் என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக எந்த நேரத்திலும் உதவ தயாராக இருக்கும் நோவே போன்ற நாடு சமரசத்தை ஏற்படுத்த உதவலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அபாயகரமான பிரச்சனையை தீர்க்க தவறும் பட்சத்தில் பெறுமதி மிக்க மனித உயிர்கள் கணிசமாக காவுகொள்ளப்படும் என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மேலும் ஒரு கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை ஒன்றினை ஏவி சில மணிநேரங்களில் பாப்பரசர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய பரிசோதனை வடகொரிய தலைநகர் பியங்யொங்கிற்கு வடக்கேயுள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டதாக முன்னர் தென்கொரியா அறிவித்திருந்தது.

வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை உரையாடி சில மணி நேரத்தினுள் இந்த ஏவுகணை ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.