இலங்கையுடனான இராணுவத் தொடர்பை மேலும் விரிவாக்கிக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அத்துல் கெசாப் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையுடன் அனைத்து துறைகளிலும் அமெரிக்கா நெருங்கிய உறவினை பேண விரும்புகிறது.
குறிப்பாக இராணுவத்துடனான தொடர்பை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.