அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க மக்கள் முன்வர வேண்டும் ; துமிந்த நாகமுவ

20 0

மக்களுக்கு சுமையாக இருக்கும் வரிகளை நீக்குவதாக தெரிவித்து அதிகாரத்துக்கு வந்துள்ள அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க விதித்த அனைத்து வரிகளையும் அவ்வாறே தொடர்ந்து கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனால் மக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுக்காமல் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்று உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

இந்த விசேட வர்த்தக வரி காரணமாக  அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் மேடைகளில் வாக்குறுதி வழங்கி இருந்தது.

அதேபோன்று பாடசாலை உபகரணங்கள் மற்றும்  அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை நீக்குவதாக தெரிவித்திருந்து.

ஆனால்  தெரிவித்த விடயங்களுக்கு முற்றாக மாற்றமான விடயங்களே தற்போது செயற்படுத்தி வருகிறது. மக்களும் சற்று பாெறுத்துப்பார்ப்போம் என்று தெரிவித்துக்கொண்டு, கழுத்து இறுகும் வரை பார்த்துக்கொண்டிக்க கூடாது. தற்போதே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்காெள்ள அரசாங்கத்துக்கு அளுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்று உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.