தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய அரிசி தட்டுப்பாடு

9 0
இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகு வரும் தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய முடியாமல் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்தல், அரிசியை இறக்குமதி செய்தல், அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் கையிருப்பு பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டறிய விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

மேலும், அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கேற்ப 88,000 மெற்றிக் தொன் அரிசி இன்றுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த பண்டிகை காலத்தை போன்று இன்றும் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் உள்ளுர் கச்சா மற்றும் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்களும் நுகர்வோரும் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மரக்கறிகளின் விலை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.