சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை நீக்குவதற்கு எதிர்ப்பு

261 0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கும் செயலுக்கு தான் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கட்சி நெருக்கடியான நிலையில் இருக்கும் போது குறித்த பதவிகளில் உள்ளவர்களை நீக்குவதற்கு பதிலாக இரண்டு தரப்பினரும் ஒற்றுமையுடன் இருப்பது மிகவும் அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள பல சிரேஸ்ட உறுப்பினர்கள் சட்டத்தை நாடி செல்லமாட்டார்கள் என்றும், சிறிய சிறிய விடயங்களை பெரிதுபடுத்தி இவ்வாறான முடிவுகளை எடுப்பது தொடர்பில் தான் கவலையடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கட்சியை விட்டு ஒருவரை நீக்கும் முன் அவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளாமல் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்றும், தன்னுடைய அபிப்ராயத்தின் படி எந்தவொரு உறுப்பினரையும் கட்சியை விட்டு வெளியேற்றாமல் கட்சிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.