பாராளுமன்ற இணையத்தளத்தில் (www.parliament.lk) ‘பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனும் துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ளதற்கமைய தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் தகவல் படிவம் ‘அ’ இற்கு அமைவாகவும், பெயர்குறித்த நியமனங்கள் தகவல் படிவம் ‘ஆ’ இற்கு அமைவாகவும் தயாரிக்கப்பட வேண்டும்.
உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்/ பெயர் நியமனங்கள் 2025 ஜனவரி 20 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில்; அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, எனும் முகவரிக்கோ அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்படல் வேண்டும்.
பெயர் குறித்த நியமனங்களின் விண்ணப்பப் படிவங்கள், பெயர் குறித்து நியமித்தவரால் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதோடு, பெயர் குறித்து நியமிக்கும் தரப்பினரால் அரசியலமைப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.