சொகுசு வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தியவர் கைது

19 0

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்புக்கு சொகுசு வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (30) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேராவில் தேக்கங்காடு பகுதியில்  புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன்  வெகனார் ரக வாகனம் இடைமறித்து சோதனையிடப்பட்டது.

அப்போது அவ்வாகனத்தில் 6 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் வாகனத்தை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.