“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” என கோஷம் எழுப்பி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இன்று (30) நடத்தப்பட்டது.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் ஏந்தியவாறு “காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே”, “இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?”, “ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா”, “15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா” என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும். 2025ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்டத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றனர்.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.