விசேட போக்குவரத்து நடவடிக்கை குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவிப்பு !

15 0

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய கடந்த 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில், விசேட போக்குவரத்து நடவடிக்கையின் மூலம் 401 மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 53 சாரதிகள், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 48 ஓட்டுநர்கள், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1350 ஓட்டுநர்கள்,  அனுமதிப் பத்திர குற்றங்களுக்கு உட்பட்ட  865 சாரதிகள் , மற்ற போக்குவரத்து குற்றங்களுக்காக 5351 சாரதிகள் மொத்தம் 8068 சாரதிகளுக்கு எதிராக  சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் எனவும், போக்குவரத்து விதிமீறல்கள் உட்பட ஏனைய போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.