சீன அரசாங்கத்தினால் “சீனாவின் சகோதர பாசம்” என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன.
சீன தூதுவர் H.E.Qi Zhenhong திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து இப்பொதிகளை வழங்கி வைத்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு தலா 6500 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சீனத்தூதுவர் H.E.Qi Zhenhong மற்றும் அவரது குழுவினர், அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுகுணதாஸ், ஆளுநரின் செயலாளர் அருள்ராஜ், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இராஜசேகர், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.