சுவிசில் நினைவுகூரப்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் சாவடைந்த அனைத்து உறவுகளினதும் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் – 26.12.2024
உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலையினால் சாவடைந்த அனைத்து உறவுகளினதும் நினைவேந்தலானது 26.12.2024 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றலுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து சுடர் வணக்கமும் மலர்; வணக்கமும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
தமிழர் தாயகத்தில் சுனாமி பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மீளக்கட்டியெழுப்புவதற்கு தங்களாலான பங்களிப்புக்களை வழங்கிய சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகள்;, சுவிஸ் நாட்டு மக்களுடன் வேற்று நாட்டு மக்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.