காசாவில் இறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்த மருத்துவமனையும் செயல் இழந்துள்ளது

25 0

காசாவில் இறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்த மருத்துவமனையும் செயல் இழந்துள்ளது அதன் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.காசாவின் சுகாதார அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளனர்.

காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையே செயல் இழந்துள்ளது. அதற்கு அருகில் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேலிய படையினர் இந்த மருத்துமவனையை இலக்குவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது மருத்துவமனையின் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன தீக்கிரையாகியுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த வருடம் இஸ்ரேலிய படையினர் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்தது முதல்இந்த மருத்துவமனை பயங்கரவாதிகளின் முக்கிய இடமாக மாறியுள்ளது, அவர்கள் தாங்கள் மறைந்திருப்பதற்கு இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர் என இஸ்ரேலிய இராணுவம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

65மருத்துவமபணியாளர்களும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையிலிருந்த நோயாளிகள் உட்பட 25 நோயாளிகளும் மருத்துவமனைக்குள்ளேயே உள்ளனர் என தெரிவித்;துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் கடும் உயிராபத்தற்ற நிலையிலிருந்த மருத்துவர்கள் வேறு அழிக்கப்பட்ட இயங்காதநிலையிலிருந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

கமால் அத்வான் மருத்துவமனையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் இந்த வாரம் கடும் தாக்குதலிற்குள்ளாகியிருந்தன.மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹ_சாம் அபு சபியா தெரிவித்திருந்தார்.வியாழக்கிழமை தாக்குதலில் ஐந்து மருத்துவம பணியாளர்கள் உயிரிழந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை ஹ_சாம் அபுசபியாவையும் பல மருத்துவமபணியாளர்களையும் இஸ்ரேலிய படையினர் தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர் என காசாவின் மருத்துவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவமனையின் இயக்குநர் கைதுசெய்யப்பட்டுள்ளதை காசாவின் சிவில் பாதுகாப்பு முகவர் அமைப்பும் உறுதிசெய்துள்ளது.

“நாங்கள் உள்ளே இருக்கின்ற போதே சத்திரகிசிச்சைக்கான அவசியமான அனைத்தையும் ஆக்கிரமிப்பு இராணுவம் தீயிட்டுகொழுத்துகின்றது, மருத்துவ பணியாளர்கள் உட்பட அனைவரையும் மருத்துவமனைக்குள்ளிலிருந்து வெளியேற்றிய  இராணுவம் பலரை கைதுசெய்துள்ளது என மருத்துவ பணியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,மருத்துவமனையின் கட்டிடங்களும் சாதனங்களும் சேதமடைந்துள்ளன “என இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார்.

கமால் அத்வான் மருத்துவமனை மீது டாங்கிகள் புல்டோசர்களை கொண்டு இஸ்ரேலிய படையினர் தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள தாதிகள் பிரிவின் தலைவர் எய்ட்சபா நாங்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு 15 நிமிடங்களே தந்தார்கள்,என குறிப்பிட்டுள்ளார்.