காசாவில் கடும் குளிர்காலம் ஆரம்பம் – இதுவரை மூன்று குழந்தைகள் பலி

30 0

காசாவில் கடும் குளிர்காலம்; ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இதுவரை மூன்று குழந்தைகள் குளிரில் விறைத்து உயிரிழந்துள்ளன.
காசாவின் தென்பகுதியில் உள்ள அல்- மவசியில் புதிதாக பிறந்த குழந்தையொன்று கடும் குளிர்காரணமாக உயிரிழந்துள்ளது.


இது  இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களிற்கு மத்தியில் தங்கள் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள காசா சிறுவர்களின் உயிர்வாழ்தல் கடும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
அல்மவசியில் சேலா மஹ்மூத் அல் -பாசிஹ் என்ற குழந்தை கடும்குளிரில் விறைத்து உயிரிழந்தது என காசாவின் சுகாதார அமைச்சின் பணி;ப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 48 மணித்தியாலத்தில் அல்பாசிஹ் உட்பட மூன்று குழந்தைகள் – மூன்று நாள்- ஒருமாதம் – உயிரிழந்துள்ளன கடும் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்ககூடியதங்குமிடம் இன்மையே இதற்கு காரணம் என கான் யூனிசில் உள்ள நாசெர் மருத்துவமனையின் மருத்துவர் அஹமட் அல் பரா சிஎன்என்னி;ற்கு தெரிவித்துள்ளார்.

அல்மாவசியில் ஒரு வீட்டு முற்றத்தில் பாசிஹ்வின் சிறிய உடல் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருப்பதையும்,குழந்தையின்31 வயது தந்தை அதனை ஏந்தியிருப்பதையும் காண்பிக்கும் படம் கிடைத்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய ஆண்கள் குழந்தையின் உடலை புதைகுழிக்குள் வைப்பதை காண்பிக்கும் படங்கள் கிடைத்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
செலா குளிரினால் உயிரிழந்தாள், என தெரிவிக்கும் அவளது தாயார் நரிமன் நான் கையில் வைத்து அவளுக்கு உடல் சூட்டை அளிக்க முயன்றேன் எங்களிடம் மேலதிக ஆடைகள் இருக்கவில்லை என அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
குழந்தையின் முகம் நீல நிறத்திற்கு மாறியுள்ளதை அவதானிக்க முடிவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.