சீதாவாக்கை பகுதியின் கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனம்பெல்ல ஸ்ரீ சுமண ராம விகாரையின் வருடாந்த கங்ஹா ரோஹண பெரஹெர இன்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு 9 மணி முதல் மறுநாள் (30) அதிகாலை 1 மணி வரை நடைபெறவுள்ளது.
பெரஹெரவில் 15 யானைகள் மற்றும் 40 நடனக் குழுக்கள் ஊர்வலமாக வருகைதரவுள்ளதோடு, அதிகளவான பொது மக்களும் கலந்துகொள்ளவுள்ளதால் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, ஊர்வலம் கொஸ்கம கனம்பெல்ல ஸ்ரீ சுமண ராம விகாரையில் ஆரம்பமாகி கொஸ்கம – பூகொடை வீதியூடாக கனம்பெல்ல சந்தியில் பயணித்து கனம்பெல்ல சந்தியிலிருந்து வலப்புறம் திரும்பி கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் சுமார் 800 மீற்றர் தூரம் வரை ஊர்வலமாக சென்று கடுகொடை சந்தியை அடைந்து மீண்டும் விகாரையினை வந்தடையவுள்ளது.
எனவே அவ்வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளும் பொதுமக்களும் ஊர்வலத்தின்போது மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து அவிசாவளை, இரத்தினபுரி மற்றும் ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்கள்
கொஸ்கம களு அக்கல சந்தியில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில், லபுகம வீதியில் வலப்புறமாக 12 கிலோமீற்றர் பயணித்து, துன்மோதர – அவிசாவளை வீதியில் 08 கிலோமீற்றர் பயணித்த பின் புவக்பிட்டிய சந்தியின் ஊடாக சென்று பாதையினை பயன்படுத்த முடியும்.
அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள்
ரன்வலவுக்கு அருகாமையில் வலப்புறமாக அஸ்வத்த கிரிந்திவெல வீதியில் சுமார் 08 கிலோமீற்றர் பயணித்த பின் இடதுபுறம் கிரிந்திவெல பாதையின் ஊடாக கொழும்பு வீதிக்கு பிரவேசிக்க முடியும்.