இலங்கை இளைஞர் குழுவுக்கு இரண்டாவது முறையாக இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

11 0

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேல் சென்று அங்கு விவசாயத் துறையில் வேலை செய்துவந்த நிலையில், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர்கள் குழுவொன்றுக்கு மீண்டும் இஸ்ரேலில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி, இவர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வளாகத்தில் அண்மையில் வழங்கப்பட்டது.

79 இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவர்கள் இஸ்ரேலில் 5 வருடங்களும் 3 மாதங்கள் சேவைக் காலத்தைக் கொண்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் குழுவினர் நேற்று (28) இஸ்ரேலுக்கு பயணிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.