யாழில் நடைமுறைகளை மீறி பயணிக்கும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

15 0
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று சனிக்கிழமை (28) தனியார் பேருந்து ஒன்று சாரதிகளுக்கான நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொளிகள் பகிரப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறான சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.