சாரதிக்காக அபராதம் செலுத்தினார் பிரதி அமைச்சர்

17 0

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, கடமையில் இருந்த அதிகாரிகள் வாகனத்தை விடுவிக்க முன்வந்த போதிலும், அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருநாகல் பகுதியில் பிரதி அமைச்சரின் சாரதி அதிவேகமாக வாகனத்தை செலுத்தியமைக்காக பிடிபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்போது வாகனத்தில் இருந்த கலாநிதி குணசேன, அனைத்து குடிமக்களும் நாட்டின் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி, அபராதத்தை செலுத்த வலியுறுத்தினார்.