சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை(29) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கமுவ மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகா தமயந்தி (57) வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நல்லதண்ணியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.