குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜனவரி 3 இல் முன்னிலையாகுமாறு யோஷித்தவுக்கு அழைப்பு

14 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித்த  ராஜபக்ஷவை எதிர்வரும் 3 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற சொத்து சேகரிப்பு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு யோசித்த ராஜபக்ஷவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரான நெவில் வன்னியராச்சி வெள்ளிக்கிழமை (27) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் நெவில் வன்னியராச்சியிடம் 4 மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.முறையற்ற வகையில் சொத்து சேகரித்த விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.