சீதுவ, வெலபட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.