மன்மோகன் சிங்கிற்கான இரங்கல் புத்தகம் திங்களன்று திறப்பு

17 0

கலாநிதி மன்மோகன் சிங் இந்தியாவின் 13ஆவது பிரதமராக 2004 மே 22 முதல் 2014 மே 26 வரை பதவி வகித்தார்.

புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.

உடல் நலக்குறைவால் மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் 26 டிசம்பர் முதல் 2025 ஜனவரி முதலாம் திகதி   ஏழு நாள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 36-38, காலி வீதி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் ஜனவரி 1 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இரங்கல் புத்தகம் திறந்து வைக்கப்படவுள்ளது.