சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
போட்டி நியூசிலாந்தின் Mount Maunganui இல் இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 போட்டிகள் 2006ஆம் ஆண்டு ஆரம்பமாகிய நிலையில் இன்று இடம்பெறவுள்ள போட்டி 26ஆவது போட்டியாகும்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணி 8 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன், நியூசிலாந்துக்கு எதிராக 14 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
மேலும், நியூசிலாந்தில் 8 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, அதில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை இன்றைய போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மேலதிகமாக 500 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அவையும் தற்போது விற்று தீர்ந்துள்ளன.
ஒரே நேரத்தில் 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்க்கக்கூடிய மைதானத்தின் பெரும்பகுதி மைதானத்தில் அமர்ந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் ஜனவரி 2ஆம் திகதி நெல்சனில் நடைபெறவுள்ள போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது