வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை

9 0
வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (21) முற்றுகையிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சேமமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரை கைது செய்திருந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 150,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 150,000 மில்லி லீற்றர் வடி ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.