அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக கல்வியமைச்சின் அறிவிப்பு

9 0

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கைக் கல்விச் சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்களிடமிருந்து அந்தப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கோருவதற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்ட அறிவிப்பு, பாடசாலைப் பதிவு, மதிப்பெண் நடைமுறை, மாதிரி விண்ணப்பப்படிவங்கள் என்பன கடந்த 11ஆம் திகதி கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, இணையதளத்தில் உள்ள ‘விசேட விளம்பரங்கள்’ பிரிவின் கீழ் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித்திகதி டிசம்பர் 31ஆம் திகதி என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.