தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 21-12-2024 சனிக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகசத்தில் நடைபெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனியின் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை வெல்பேட் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு கிருபா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை யேர்மனியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.திருநிலவன். (திரு) அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
நினைவுரையினை தேசத்தின் குரல் பாலா அண்ணன் நினைவு சுமந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் துறைப்பொறுப்பாளர் அவர்கள் ஆற்றியிருந்தார். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.