தொடர் கன மழையால் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

13 0

வவுனியா மாவட்டத்தில் தொடர் கன மழையால் 84 ஹெக்டேயர் பப்பாசி செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், தமது நிலமைகளை யாரும் கண்டு கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளினுடைய பப்பாசி பயிற்செய்கைகள் கன மழை காரணமாக முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, பப்பாசி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுள் 100 வீத அழிவாக 21 ஹெக்டேயரும், 75 வீத அழிவாக 17 ஹெக்டேயரும், 50 வீத அழிவாக 21 ஹெக்டேயரும், 25 வீத அழிவாக 25 ஹெக்டேயரும் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைகளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பப்பாசி செய்கையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், விவசாயிகளின் பாரிய நிதிச் செலவில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசிப் பயிற்செய்கைகள் அண்மையில் பெய்த கன மழையினால், சில தோட்டங்கள் முழுமையாகவும், சில தோட்டங்கள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.