5 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான பெத்தும் அல்லது ‘லொக்கா’ என்ற நபர் நேற்று (20) இரவு இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காலி-தடல்ல பிரதேசத்தில் பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே ‘லொக்கா’ என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி – தடல்ல மயானத்திற்கு அருகில் நேற்று மாலை 6.50 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ‘லொக்கா’, காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஏற்கனவே உயிரிழந்திருந்த நிலையில், அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர், காலி, மெலேகொட பகுதியைச் சேர்ந்த 5 கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்