தம்புள்ளையில் தென்னந்தோப்பில் காட்டு யானைகள் அட்டகாசம் !

11 0

தம்புள்ளை, வெவலவெவ, அலகொலவெவ பிரதேசத்தில் உள்ள 30 ஏக்கர் தென்னந்தோப்பு ஒன்றிற்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் பல தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

சுமார் 10 ஆண்டு காலமாக தென்னந்தோப்புகளில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என தென்னந்தோப்புகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென பிரதேசவாசிகளும் தென்னந்தோப்புகளின் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.