ஹைபிரிட் (கலப்பு) வாகன இறக்குமதிகளின் போது, அவற்றின் இயந்திர திறனின் அடிப்படையில் வரி விதிக்கப்பட்டால், அது நுகர்வோர் மற்றும் அரசாங்கம் இருவரையும் திருப்திப்படுத்தும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது.
இதன்போது, நாட்டில் வாகனங்களின் விலையும் குறையும் என்று ஜப்பான் இலங்கை வணிக சபையின் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake) கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் தகவல்களை வழங்கிய அவர், ஹைபிரிட் வாகனங்களைப் பயன்படுத்துவதில் உலகளாவிய போக்கு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடும்போது ஹைபிரிட் வாகனங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச் செலாவணியும் குறைந்தளவிலேயே தேவைப்படுகிறது