பொலன்னறுவை – வெலிகந்த, மகுல்பொக்குண சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது கெப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மகுல்பொக்குண பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.