புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை…

6 0

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை என்றும் எம்.கே. சிவலிங்கம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனாதிபதி இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அவை அமுல்படுத்தப்படவில்லை.

தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அரசியலமைப்பு என்பது பழைய மொந்தையிலேயே புதிய கள்ளு போன்று இருக்குமே தவிர எவ்வித தீர்வும் கொண்டதாக இருக்கப்போவதில்லை