போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (20) கைது செய்துள்ளனர்.
மதவாச்சி பொலிஸ் பிரிவின் இசின்பெஸ்ஸகல பகுதியில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போதே இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருபதுக்கும் அதிகமான போதை மாத்திரைகளை விசேட அதிரடிப்படையின் செட்டிகுளம் முகாம் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 19 வயதுடைய மதவாச்சி பகுதியை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.