நுவரெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி

6 0
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வுட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பீரட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்றுள்ளது.

பீரட் தோட்டம், திக்ஓயா பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய பெண் தோட்டத் தொழிலாளி ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பீரட் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்துக் கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி திக்ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.