மொனராகலை, தம்பகல்ல , பிடதலாவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்றுள்ளது.
தம்பகல்ல , பிடதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுயைட இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் கடந்த வியாழக்கிழமை (19) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாததால் இளைஞனின் மனைவி இளைஞனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, காணி ஒன்றில் இளைஞன் உயிரிழந்திருப்பதைக் கண்ட மனைவி உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.