அரச நிதியை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை

316 0

13567364_10154165482046327_948806607344350334_nஅரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள், விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இது தொடர்பிலான யோசனை ஒன்றை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொண்டுள்ளார் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.அரசாங்க நிதியை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.அரச நிதியை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் வகையில் சுற்றுநிருபமொன்று வெளியிடப்படவுள்ளது.

குறிப்பாக உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்கள் பணத்தைக்கொண்டு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.  அரசாங்க நிதி, வெளிநாட்டு கடன்கள் போன்றவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் அரசாங்க உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணங்களை கிரமமாக்கும் திட்டமொன்றை ஜனாதிபதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளார் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.