அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலம் நீடிப்பு

11 0

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இன்றுடன் முடிவடையவிருந்த நிலையிலேயே, அக்காலம்,ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை நாடளாவிய ரீதியில், தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 35,600 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெற்றுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது