நாட்டு அரிசியை மறைத்து வைத்திருந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசியை நுகர்வோர் சேவை அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர்.
கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பல வாடிக்கையாளர்களிடமிருந்து கினிகத்தேன பொலிஸாருக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாதிப் வீரசேகரவின் பணிப்புரையின் பேரில் கினிகத்தேனை பொலிஸ் நிலையத் தளபதி பொலிஸ் பரிசோதகர் விராஜ் விதானகே, நுவரெலியா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை அதிகாரிகளின் உதவியுடன், இந்தக் கடையில் வௌ்ளிக்கிழமை (20) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கடையில் இருந்து 10 கிலோ கிராம் நாட்டு அரிசி 21 மூடைகள், 05 கிலோ கிராம் நாட்டு அரிசி உள்ளிட்ட 360 கிலோ கிராம் நாட்டு அரிசி கண்டுபிடிக்கப்பட்டது