மியான்மார் படகில் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 35 ஆண்கள்,25 பெண்கள்,43 சிறுவர் மற்றும்12 படகோட்டிகள் உற்பட 115 பேரிடமும் திருகோணமலை துறைமுக பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
வாக்குமூலம் பெற்றுக்கொண்டதன் பின்னர், அனைவரையும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும்,அதன் பின்பு நீதிமன்றம் வழங்கும் உத்தரவிற்கு அமையவே இவர்களை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பொலிஸார் கூறினர்.