ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்ய வழக்கு தாக்கல்

12 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் இராஜிநாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

இந்நிலையில் அதை இடைநிறுத்தித் தடை உத்தரவு பிறப்பிக்கவும், மாவை சேனாதிராஜா தொடர்ந்து கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கவும் உத்தரவிடக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறக்குமாறு கோரியே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

வழக்கு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஊடாக யாழ். நீதிமன்றில் நேற்றயதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் யார் என்ற விடயத்தில் குழப்பநிலை ஏற்ப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி அதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழரசுக்கட்சியின் யாப்பு விதிமுறைகளை மீறி மத்தியகுழு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும், தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் யாழ். நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.