2021 இல் ஈராக்கில் என்னை கொலை செய்ய திட்டமிட்டனர் – பரிசுத்த பாப்பரசர்

19 0
image
2021 இல் ஈராக்கிற்கு விஜயம் மேற்கொண்டவேளை தற்கொலை குண்டுதாரிகள் தன்னை தாக்குதவற்கு திட்டமிட்டனர் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்கள் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் ஈராக்கிற்கு விஜயம்மேற்கொண்டவேளை வெடிபாருட்களுடன் பெண்ணொருவர் மௌசுலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார் என பிரிட்டிஸ் பிரான்ஸ் அதிகாரிகள் ஈராக்கிய பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் தன்னை கொல்லும் நோக்குடன் டிரக்கொன்றும் அப்பகுதிக்கு விரைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

சுயசரிதையின் சில பகுதிகளை இத்தாலிய செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஈராக்கிய பொலிஸார் விரைந்து செயற்பட்டு தற்கொலை குண்டுதாரிகளை தங்களை தாங்களே வெடிக்கவைத்தனர்,என பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

இது யுத்தத்தின் விசகனி என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.