பசறை – பதுளை வீதியில் 10 ஆவது மைல்கல் அருகில் மீன் விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (19) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, பசறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.