கொள்ளை, திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது !

10 0

ஜா- எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏக்கல பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டு  சம்பவங்களுடன் தொடர்புடைய  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா- எல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் ராகம, மஹாபாகே, மாலம்பே மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளதாகவும் ஒரு சந்தேக நபருக்கு எதிராக பூகொட நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் விசாரணயைில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 02 தங்க நெக்லஸ்கள், 02 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உருகிய தங்கம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.